ஆய்வு
அறுபது வயதை கடந்த பிறகும் திடகாத்திரமாக இருக்கும் கிரா மத்து பெரியவர்கள் யாரிடமாவது கேட்டு பாருங்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்னவென்று? சட்டென்று பதில் சொல்லிவிடுவார்கள். பழைய சோறும் கம்பங் களியும்தான் என்று. பழைய சாதம் என்பது நம் முன்னோர்களின் உடல் நலத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம் நம் பாரம்பரி யத்திற்கு உண்டு. ஆனால் இப்போது பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளால் பழைய சோற்றின் மகத்து வம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது. அது சமீபத்திய ஆய்வு அறிக்கை யின்படி இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவினை விரும்ப தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்கன் நீயூட்ரிஷன் அசோசியேஷன் என்ற அமைப்பு பழைய சோற்றின் பெருமைகளை பட்டிய லிட்டுள்ளது. அதன் பிறகு விழித்துக் கொண்ட இன்றை தலைமுறையினர் கூகுளில் பழைய சாதத்தை தேட ஆரம்பித்துள்ளனர். ஓட்டல்களில் பழைய சோறு கேட்டு வாங்கி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.
இன்று பழையசோறு என்ற உணவை நம்பி மட்டுமே பல புதுப்புது ஓட்டல் கள் திறக்கப்பட்டுள்ளன. அது மட்டு மல்லாமல் பழைய சோறு பற்றிய பல விஷயங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அமெ ரிக்கர்களால் அதிகம் தேடப்படும் உணவு செய்முறையில் பழையசோறு முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஓட்டல்களில் பழைய சோறு உணவும் விற்பனை செய்யப்படுகிறது. தழிழ்நாட்டிலும் கூட ஒரு சில இடங்க ளில் பழைய சோறு விற்பதற்குகென பிரத்தியேக ஓட்டல்கள் திறக்கப்படு கின்றன. அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்துவரும் தமிழர்களிடம் பழைய சோறு செய்முறைகளை கேட்பதற்கா கவே பலர் நட்புபாராட்டுகிறார்களாம். பழையசோற்றில் மற்ற உணவு பொருட்களில் இல்லாத வைட்ட மீன்கள் பி.6, பி.12, போன்றவை வளமாக நிறைந்துள்ளது. என்று சொல்லப்படு கிறது. இதில் லட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமாணப் பிரச்சனைகள் நீங்கி செரிமாண மண்டலம் ஆரோக்கியமாக செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகமாக உள்ளது. தினமும் காலை யில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பழையசோற்றுக்கு அடுத்தப்படியாக அமெரிக்கர்கள் விரும்பும் அடுத்த உணவு இட்லி என்று ஆராய்ச்சியில் சொல்லப்படு கிறது. எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை களை பழைய சோறு விரட்டி அடிக்கி றது என்ற உண்மையையும் ஆராய்ச்சி யில் சொல்லப்பட்டுள்ளது. உடல் சூட்டை குறைக்க அருமையான மருந்து பழைய சோறுதான் என்று சுட்டிகாட்டுகின்றனர். இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்கிறதாம். இதற்கு காரணம் அதில் உள்ள நல்ல பாக்டீரி யாக்கள்தான் என்று கூறுகின்றனர். பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைகுத்தல் அரிசி சிறந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இந்த அரிசியில்தான் ஏராள மான ஊட்டசத்துக்களும் தாது உப்புக்களும் நிறைந்துள்ளது என்று சொல்கின்றனர். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக இருந்த பழைய சோறு அனேக வீடுகளில் காணா மல் போய்விட்டது. இனியாவது பழைய சோற்றின் மகத்துவத்தை புரிந்துகொண்டு தினமும் உட்கொள்ளமுடியாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று அல்லது இரண்டு முறையாவது உட்கொள்ள முயற்சிப்போம்.